ஜோதிடம் . ஜாமக்கோள் பிரசன்னம் . சோழிப் பிரசன்னம் , பார்க்க, கற்க , தொடர்பு கொள்ளவும். +91 99915 99456
குருஜி சேலம் பிரபஞ்சன் ஆகிய நான் சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் வசித்து வருகிறேன்.
சிறுவயதிலிருந்தே ஜோதிடத்தின் மீது இருந்த தீராக் காதலாலும், தணியாத தாகத்தாலும், தொடர் முயற்சிகளாலும் பல்வேறு ஜோதிட நூல்களைக் தேடித் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். (சித்தயோகி சிவதாசன் இரவி ஐயாவின் நூல்கள் என் சிந்தனை திறனை மேலும் செதுக்கியது, ஜோதிடத்தில் பல அதி நுட்பங்கள் புரிய ஆரம்பித்தது) அதன் விளைவாக இளம் வயதிலேயே ஜோதிடத்தின் நுட்பங்களைக் கற்றுத் தேர்ந்தேன்.
சிறிது காலத்தில் பிரசன்னத்தின் மீது ஆர்வமும், தாகமும் எனக்குள் ஆழமாக பிறந்தது. அப்போது காலம் எனக்கு அடையாளம் காட்டியது அதிசிறந்த ஆசானான திருப்பூர் கோபாலகிருஷ்ணன் என்னும் திருப்பூர் G.K. ஐயா..
G.K. ஐயாவிடம் அஷ்டமங்கள சோழிப் பிரசன்னம் பயின்றேன்.
ஐயாவின் அருளாசியாலும், இயற்கையின் அருளாலும், இன்று பிரசன்னத்தினால் எனக்கு உலகின் நான்கு திசைகளில் இருந்தும் பாராட்டுக்கள் கிடைத்துக் கொண்டிருக்கிறது.
ஆசான்களால் கிடைத்த அறிவைக் கொண்டும், என்னுடைய தொடர் ஆராய்ச்சியினால் கிடைத்த அறிவைக் கொண்டும், இன்று பல மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.
அடிப்படை ஜோதிடம், உயர்நிலை ஜோதிடம், ஜாமக்கோள் பிரசன்னம், அஷ்டமங்கள சோழிப் பிரசன்னம் ஆகியவற்றை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.
என் வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஜோதிடத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன். இயற்கை எனக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நுட்பங்களையும் கற்றுத் தந்து கொண்டிருக்கிறது.
என்னுடைய ஜோதிட ஆர்வத்திற்கு வழியமைத்து கொடுத்த என் குடும்பத்தாருக்கும், உறுதுணையாக நின்ற நண்பர்களுக்கும் (பெருமாள், சுதர்சன், ஏறன்சிவா, அஜந்தா), ஒவ்வொரு நிலையிலும் எனக்கு குருவாக இருந்து என் வாழ்க்கையை செதுக்கிய ஆசான்களுக்கு (கண்ணன், சென்ன கிருஷ்ணன், ராஜசேகர், சித்தயோகி சிவதாசன் இரவி, திருப்பூர் கோபாலகிருஷ்ணன்) எனது நன்றிகளைக் காணிக்கையாக்குகின்றேன்.
எதிர்காலத்தில் மெய்ஞ்ஞான ஜோதிடம் என்ற முறையையும் ஆகச்சிறந்த பல நூல்களையும் படைக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை விருப்பம் காதல் எல்லாம்.. காலம் கனிந்து வரும் பொழுது இறைவன் அருளாலும் இயற்கையின் அருளாலும் குருமார்களின் அருளாலும் அனைத்தும் நடக்கும்.
வாழ்க்கையில் தற்போது நடக்கும் பலன்கள்.
ஆண் பெண் இருவருக்கும் இடையேயான நட்சத்திரரீதியான பொருத்தங்கள், கிரக ரீதியான பொருத்தங்கள், எதிர்கால வாழ்க்கை பற்றிய ஆய்வு.
யாருக்கு என்ன தொழில் அமையும் என்ற ஆய்வு, எந்த காலகட்டத்தில் தொழிலை தொடங்க வேண்டும் என்பது பற்றி ஆய்வு. சொந்தத் தொழில், கூட்டு தொழில், வியாபாரம் சார்ந்த ஆய்வு.
ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்பிற்கு தகுந்தவாறு படிக்கும் கல்வியை தேர்ந்தெடுக்கும் ஆய்வுகள்.
வீடு மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மனையடி மற்றும் வாஸ்து ரீதியான ஆலோசனைகள்.
பிறந்த குழந்தைகளுக்கு, தொழில் நிறுவனங்களுக்கு, நியூமராலஜி படி சிறந்த பெயர்கள் அமைத்து தரப்படும்.
வாட்ஸ்அப் திறக்கிறது... (Opening WhatsApp...)
உங்கள் தேவைகளுக்கு தீர்வு காண இன்றே முன்பதிவு செய்யுங்கள்.
ராசி, நட்சத்திரம், கிரகங்கள் பற்றிய அடிப்படை அறிவு.
பாவகம், தசாபுத்தி மற்றும் கோச்சார பலன்கள்.
தாம்பூல பிரசன்னம் மற்றும் உயர்நிலை கணிதங்கள்.
அடிப்படை மற்றும் உயர்நிலை கணிதங்கள்.